பிரேம பிரபா

கனவுகளை வென்றுவிடு

Tackk is the newest format to
creatively share anything on the web.


மரம், கனிமற்றும்அது.

மாலை நிழல்களைப் போல

இருவரின்

காத்திருப்புத் தருணங்கள்

நீண்டு கொண்டே போகிறது.

துளியும் தயக்கம் இல்லாத

குழந்தைகளின்

நிர்வாண அங்கீகாரத்தில்

கைகளைக் கோர்த்துக் கொண்டு

வனத்தில் வலம் வந்த

ஆதாமும் ஏவாளும்

இரவின் முகவரிக் காலங்களில்

ஆக்க் கூடிய மட்டும்

தங்களுக்கான இடைவெளிகளை

விலக்க முயல்கிறார்கள்.

துளியும் முன்னேற்பாடில்லாத

வெகு இயல்பான பாவனையில்

அவர்கள் கண்கள் மட்டும்

பொய்யாக அபினயிக்க

தரையிறங்குகிறது

எதிர் பார்ப்பின் தருணங்கள்

புறவெளியைத் தீண்டிய

ஒரு பறவையைப் போல.

நேரம் கடந்து  போக

இருவரின் தயக்கமான

முன் மொழிதலை

புறக்கணித்தவாறு

தொடர் முத்தங்களின்

பரிவர்த்தனையில்

அரங்கேற்றிக்கொள்கிறது

அவர்களுக்கான காம்ம்

வெகு அனிச்சையாக.

r sale. Tackk about your engagement and your big day. Tackk about your band's upcoming gig. Tackk about your family vacation. You can Tackk about anything. You control the look and feel of your Tackk, who to share it with, and even how long it lives. So what are you waiting for?

Comment Stream